அமெரிக்கா பயணிக்கவுள்ள இலங்கை மாணவர்கள்!!

அமெரிக்காவில் நடைபெறும் பொறியியல் மற்றும் விஞ்ஞான கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து 4 மாணவர்கள் அமெரிக்கா பயணிக்கவுள்ளனர்.

அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு இலங்கைப் பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட இளம் விஞ்ஞானிகள் 4 பேர் அமெரிக்கா பயணிக்கவுள்ளனர்.

இவர்களுக்கான பயணச் சீட்டுக்களை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனத காரியாலயத்தில் வைத்து இன்று வழங்கினார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை பெனின்சுலா நகரில் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் 72 நாடுகளைச் சோந்த ஆயிரத்து 700 மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கிம்ஹான் விஜேவாதன (சென் அன்தனிஸ் கல்லூரி கண்டி), கஜிந்து பண்டார (சென் அன்தனிஸ் கல்லூரி கண்டி) சுபுன்சில்வா (டெமகினோன் கல்லூரி கந்தானை), ருமல் இந்துவர (ஆனந்த தேசிய கல்லூரி புத்தளம்) ஆகிய நான்கு மாணவர்களுமே கண்காட்சிக்குப் பயணிக்கவுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி