சட்­டங்­கள் தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தைப் பயன்­ப­டுத்தி தப்­பித்­துக் கொள்ளும் குற்றவாளிகள்!!

குற்­ற­வி­யல் வழக்­கு­க­ளில் தாம­தம் என்­பதே பெரும் பிரச்­சி­னை­யாக உள்­ளது. சட்­டங்­கள் தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தைப் பயன்­ப­டுத்தி பெரிய குற்­றச்­செ­யல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் தப்­பித்­துக் கொள்­கின்­ற­னர். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் யாழ். மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நீதித்­துறை திருத்­தச் சட்­ட­வ­ரைவு, தண்­ட­னைச் சட்­டக்­கோவை திருத்­தச் சட்­ட­வ­ரைவு, குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­மு­றைச் சட்­டக்­கோவை திருத்­தச் சட்­ட­வ­ரைவு ஆகி­யன மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

அதி­கா­ரத்­தில் இருப்­ப­வர்­கள் முக்­கி­ய ­மாக அர­சி­யல் அதி­கா­ரத்­தில் இருப்­ப­வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட குற்­றச்செ­யல்­கள் உரி­ய­நே­ரத்­தில் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. ஆட்சி மாற்­ற­மொன்று ஏற்­ப­டும்­வரை அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­கள் இழுத்­த­டிக்­கப்­ப­டும். அவர்­கள் ஆட்­சிக்கு வந்த பின்­னர் இந்த நட­வ­டிக்­கை­கள் முழு­மை­யாக முடி­வுக்­குக் கொண்டு வரப்­ப­டும். ஊழல், மோச­டி­கள் உயர்ந்த மட்­டத்­தில் ஈடு­ப­டு­வ­தற்கு இதுவே பிர­தான கார­ண­மா­கும்.

முக்­கி­ய­மான அர­சி­யல் புள்­ளி­கள் தொடர்­பு­பட்ட குற்­றச் செயல்­கள் பற்­றிய விசா­ர­ணை­களை நடத்தி முடிப்­ப­தற்கு ஐந்து ஆண்டு நாடா­ளு­மன்­றக் காலம் போது­மா­ன­தாக இல்லை. ஆட்சி மாற்­றங்­க­ளின் பின்­னர் மோச­டிக்­கா­ரர்­கள் நிரந்­த­ர­மா­கத் தப்­பிச்­செல்­லும் வர­லா­றும் காணப்­ப­டு­கின்­றது.

ஊழல், மோச­டி­கள் தொடர்­பான விட­யத்­தில் நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கக் கூறி இந்த அரசு ஆட்­சிக்கு வந்­தது. துர­திர்ஷ்டவ­ ச­மாக ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு மூன்று ஆண்­டு­க­ளில் ஒரு வழக்­கில் மாத்­தி­ரமே தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த வழக்­கும் தற்­போது மேன்­மு­றை­யீட்­டுக்கு உட்­பட்­டுள்­ளது.

பொது­வான சட்ட அடிப்­ப­டை­யின்­கீழ் இரண்டு மேன்­மு­றை­யீ­டு­க­ளுக்கு அதா­வது, மேலும் ஒரு தசாப்­தத்­துக்கு வழக்கை இழுத்­துச் செல்ல முடி­யும்.
துரி­த­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளும் நோக்­கில் தயா­ரிக்­கப்­பட்ட பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழும் வழக்­கு­கள் கால­தா­ம­த­மாக இடம்­பெ­று­வ­தைக் காண­மு­டி­கின்­றது.

இரு­பது வரு­டங்­கள் வழக்கு இழு­பட்­டுச் செல்­லும் நில­மை­யும் உள்­ளது. இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட தற்­கொ­லைக் குண்­டுத் தாக்­கு­தல் வழக்­கைக் கூற­மு­டி­யும்.
17 ஆண்­டு­க­ளின் பின்­னரே இந்த வழக்­கில் தண்­டனை வழங்­கப்­பட்­டது.

இந்த வழக்­கில் இந்து மத­குரு ஒரு­வ­ரும், அவ­ரு­டைய மனை­வி­யும் குற்­றஞ்­சாட் டப்பட்­டி­ருந்­த­னர். மத­கு­ரு­வுக்கு 17 ஆண்­டு­க­ளின் பின்­னர் தண்­டனை வழங்­கப்­பட, அவ­ரு­டைய மனைவி 17 ஆண்­டு­க­ளின் பின்­னர் வழக்­கி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டார். அது­வரை அவர் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

வழக்­கி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட அவர் மனோ­நிலை பாதிக்­கப்­பட்­டுச் சிகிச்சை பெற்று வரு­கின்­றார். இது சட்­டத்­து­றை­யில் காணப்­ப­டும் கால­தா­ம­தத்­துக்கு சிறந்த உதா­ர­ண­மா­கும் – என்­றார்Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி