பேருந்தில் பயணிக்கும் மக்களுக்கான அறிவித்தல்!

மீதிப்பணம் அல்லது பற்றுச்சீட்டு வழங்காத பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு தமது ஆணைக்குழு தயாராக உள்ளதாக ஆணைக்குழுவின் மேல் மாகாண சபை தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார்.

உரிய விலையை விடவும் அதிக கட்டணம் அறவிடும் பேருந்து தொடர்பில் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் 0115559595 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி