ஒன்றரை லட்சம் பசுக்களை கொல்ல திட்டமிட்டுள்ள நியுசிலாந்து!!!

நியுசிலாந்து நாட்டில் பசுக்களுக்கு பரவும் நோய் தொற்றை முற்றாக ஒழிக்க நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் பசுக்களை கொல்ல அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திங்களன்று இது தொடர்பான அறிக்கையை வெளியிட்ட அரசியல் மற்றும் தொழில்துறை தலைவர்கள், இத்திட்டத்திற்கு பல மில்லியன் டொலர் தொகை செலவாகும் என்றாலும், வெற்றி பெற்றால் அது இந்த கொடிய பாக்டீரியா தொற்றை நிரந்தரமாக ஒழித்ததாக மாறும் என தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தை பொறுத்தமட்டில் பசு வளர்ப்பு என்பது பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.

ஆனால் இங்கு அடிக்கடி பரவும் நோய் தொற்று காரணமாக அதிக இழப்பையும் விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் முதன் முறையாக Mycoplasma bovis என்னும் நோய் பசுக்களில் பரவியது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் பரவிய இந்த நோயால் பெரும்பாலான பண்ணைகள் பேரிழப்பை சந்தித்தன.

இந்த நிலையிலேயே நியூசிலாந்தில் பசுக்களை கொல்லும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தது.

நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்படும் எந்த பண்னையில் இருந்தும் பசுக்களை கொல்லலாம் எனவும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நியூசிலாந்தில் மட்டும் சுமார் 10 மில்லியன் பசுக்கள் உள்ளன. அங்குள்ள மொத்த சனத்தொகையை விடவும் பசுக்களின் எண்ணிக்கை இருமடங்காகும்.

நாட்டில் அதிகமாக ஏற்றுமதியாகும் பொருட்களில் பெரும்பகுதி பால் பொருட்களாகும். நியூசிலாந்தில் உள்ள 38 பண்ணைகளில் இதுவரை Mycoplasma bovis நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி குறித்த நோய் தொற்று காரணமாக இதுவரை 24,000 பசுக்களை கொன்றுள்ளனர். மேலும் 128,000 பசுக்களை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த 10 ஆண்டுகளில் குறித்த நோய் தொற்றை முற்றாக ஒழிக்க சுமார் 462 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையை அரசு ஒதுக்கியுள்ளது.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி