இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது!!

தமிழ் இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது. இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்ட பின்­னரே அது தொடர்­பில் பரி­சீ­லிக்க முடி­யும். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார்.

வடக்கு இளை­யோர்இரா­ணு­வத்­தில் சேர வேண்­டும் என்று யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணுவ கட்­ட­ளைத் தள­பதி கூறி­யி­ருந்­தார். அது தொடர்­பில் அவ­ரி­டம் கேட்­ட­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தற்­போது இலங்கை இரா­ணு­வம் சிங்­கள இரா­ணு­வம் போல உள்­ளது. முத­லில் இன­வி­கி­தா­சார அடிப்­ப­டை­யில் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­ப­ட­வேண்­டும். படை­யி­ன­ரு­டன் துணைப்­படை போல தமிழ் இளை­யோர் இணைந்து கொள்­வது என்­பது, எமது விடு­த­லைப் போராட்­டத்­துக்­கும், அதற்­காக உயிர்­து­றந்­த­வர்­க­ளுக்­கும் நாங்­கள் செய்­யும் துரோ­க­மா­கவே அமை­யும்.

எனவே இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்டு எமது மண்­ணிலே நாங்­களே எங்­களை ஆள்­வ­தற்­குத் தீர்வு எட்­டப்­பட்ட பின்­னர், சிங்­க­ளப் படை என்­பது இலங்­கைப் படை என்று மாற்­றப்­பட்ட பின்­னர் இன­வி­கி­தா­கார அடிப்­படை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால் அதன்­பின்­னர் படை­யில் இணைந்­து­கொள்ள முடி­யுமே தவிர, இரா­ணு­வத் தள­ப­தி­யு­டைய அல்­லது எவ­ரு­டைய ஆசை வார்த்­தை­க­ளை­யும் நம்பி அதில் இணை­யக்­கூ­டாது.

எமது கௌர­வம் துணைப்­ப­டை­யில் இணைந்­தால் பாதிக்­காது என்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­டும்­போ­து­தான் இணை­ய­வேண்­டும். அவ­ச­ரப்­பட்டு குழி­க­ளிலே விழ­வேண்­டாம் – என்­றார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி