தமிழ் இனப்படுகொலை வாரம் செம்மணிப் புதைகுழிப் பகுதியில் இன்று ஆரம்பமானது!!

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரம் செம்மணிப் புதைகுழிப் பகுதியில் இன்று ஆரம்பமானது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இன்று காலை யாழ். செம்மணி பகுதியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுது.

செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்ட சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிரிசாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 600 பேர் வரையானவர்கள் புதைக்கப்பட்ட பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

பொது ஈகைச் சுடரினை வட மாகாண சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஏற்றி வைத்து அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இலங்கை அரச படைகளினாலும் அதன் ஆதரவுடனும் கடந்த மூன்று தசாப்தங்களால் நடாத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக நீதி கிடைக்க வேண்டுமென்று சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இனப்படுகொலை வாரம் இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி