டொனாலட் டிரம்ப் இளவரசி டயானா குறித்து கூறியது!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் இளவரசி டயானா குறித்து வானொலியில் 1997 ஆம் ஆண்டு உரையாடிய பதிவு தற்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இளவரசி டயானா குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1990 களில் Howard Stern என்ற வானொலி பண்பாளர் வழங்கும் வானொலி நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் அதிகமாக கலந்துகொள்வார்.

இவ்வாறு கலந்துகொள்கையில், 1997 ஆம் ஆண்டு இவர் இளவரசி டயானா குறித்து சற்றும் யோசிக்காமல் பேசியுள்ள பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

இளவரசி டயானா மக்களிடம் எவ்வாறு அணுகிறார் என்பதை நான் கவனிப்பேன். அவர் அழகானவர் என்று கூறிய டொனால்ட், நான் இளவரசி டயானாவுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், அவர் முதலில் HIV சோதனை செய்துகொள்ள வேண்டும் என கூறி நக்கலாக சிரித்துள்ளார்.

அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன், அப்போது அவரை நான் உன்னிப்பாக கவனித்துள்ளேன். அவர் சில நேரங்களில் பித்துபிடித்தவர் போல் இருப்பார் என்று கூறியுள்ளார்.

இருப்பினும், அவர் ஒரு உண்மையான இளவரசி ஆவார். 1997 ஆம் ஆண்டு இவர் இந்த நேரலையில் கலந்துகொண்ட 6 மாதத்திற்கு பின்னர் இளவரசி டாயானா இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மற்றும் ஒரு நிகழ்ச்சியான 2000 ஆம் ஆண்டில் உலகின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியல் குறித்து டொனால்ட் டரம்ப் வானொலியில் பட்டியலிடுகையில், அதில், தனது மனைவி மெலேனியாவுக்கு முதல் இடம், தனது முன்னாள் மனைவி இவானாவுக்கு இரண்டாம் இடமும், மூன்றாவது இடத்தை டயானாவுக்கு கொடுத்தார்.

1996 ஆம் ஆண்டில் இளரவசர் சார்லஸை விவாகரத்து செய்யப்போவதாக டயானா அறிவித்த பின்னர், அவரின் 31 வது பிறந்தநாளுக்கு டொனால்ட் டிரம்ப் பூங்ககொத்து அனுப்பி வைத்துள்ளார்.

அதில், டாயானவின் விவாகரத் குறித்து கவலைப்பட்டதாக தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் இந்த நேரலை பதிவுகள் அனைத்தும் தற்போது மீண்டும் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி