ஊழல் குற்றச்சாட்டிற்கு எதிராக வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில்!!

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல் குற்றச்சாட்டிற்கு எதிராக இன்று வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணிப்பறக்கணிப்பு தொடர்பாக வவனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான மு.சிற்றம்பலம் கருத்து தெரிவிக்கும்போது,

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் அராஜகங்களை எதிர்த்து தாமாக குரல் கொடுக்க முடியாத விளக்கமறியல் கைதிகள் சார்பிலே சட்டத்தரணிகளான நாங்கள் அவர்களுடைய நிலைமைகளை வெளி உலக மக்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் இன்றைய பணிப்பறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.வவுனியாவில் சிறைச்சாலை உருவாக்கப்படும் போது வடபகுதியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வெளியேற முடியாத மக்களுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையிலே அது ஏற்படுத்தப்பட்டது.

ஒரு கைதி நீட்டி நிமிர்ந்து படுப்பதனால் ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபா கொடுக்கவேண்டும், அங்குள்ள சிறைக் காவலர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பினை உள்ளிருந்து வெளியே எடுப்பதாக இருந்தால் ஒரு நிமிடத்திற்கு நூறு ரூபா கொடுக்கவேண்டும்.வவுனியா நீதிமன்றம் போதைப் பொருட்கள் பாவனையில் இறுக்கமான நிலையை கடைப்பிடிக்கின்றது. ஆனால் சிறைச்சாலையில் நீதிமன்றம் எதைத்தடுக்க நினைக்கின்றதோ அது தாராளமாகவே கிடைக்கின்றது.

ஏழைகள் துன்புறுத்தப்படுவதும் ஏழைகளுடைய பணம் வஞ்சிக்கப்படுவதும் ஏழைகளின் கஸ்ட்டத்தில் ஒரு சிலர் பணம் சம்பாதிக்கின்றதை நிறுத்த வேண்டும், பொதுமக்கள் மத்தியிலே நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.பொதுமக்கள் தொடர்பில் போதிய விழிப்பணர்வு இல்லாத காரணத்தினால் இன்றைய பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளோம்.

உடனடியாக இங்கு கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் மாற்றப்பட்டு புதிதாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும்.சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சுதந்திரமாக பாரபட்சமற்ற ஒரு குழுவை அமைத்து இங்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு சாட்சிகள் மூலம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றையும் மூத்த சட்டத்தரணி மு.சிற்றம்பலம் விடுத்துள்ளார்.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி