இராணுவத்திற்கு இளைஞர்கள் அழைப்பு!!

வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாறு யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்துள்ளார்.

யாழில் சிங்கள டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள், நல்லவர்கள். எனினும் கடந்த 30 வருட யுத்தம் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று பிரித்து விட்டது.

எனினும் தெற்கு சிங்கள மக்கள், வடக்கு தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வடக்கில் மின்சாரம் இல்லாத நிலையில் கூட வடக்கிலிருந்து சிறந்த மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உருவாகியிருந்தார்கள்.

எனவே தற்போதைய இளைஞர், யுவதிகளுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். இராணுவத்தை சிங்கள இராணுவம் என எண்ணாதீர்கள்.

இராணுவ வேலையும் ஒரு அரச வேலை தான். எனவே, வடக்கு இளைஞர்களையும் இராணுவத்தில் இணைந்து சேவையாற்ற முன்வருமாறு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி