ஏவு­க­ணைச் சோத­னை­யில் ஈடு­பட்­டால் ஈரான் பேர­ழி­வைச் சந்திக்கும்!! - ட்ரம்ப்

ஈரா­னு­ட­னான அணு­வா­யுத் பர­வல்த் தடை ஒப்­பந்­தத்­தில் இருந்து வில­கி­யுள்­ளது அமெ­ரிக்கா. இத­னால் ஈரான், அணு­வா­யு­தச் சோத­னை­யில் மீண்­டும் ஈடு­ப­டக்­கூ­டிய வாய்ப்­புக்­கள் உள்­ள­தா­கக் கரு­தப்­ப­டும் நிலை­யில் அவ்­வாறு ஈரான் ஏவு­க­ணைச் சோத­னை­யில் ஈடு­பட்­டால் அந்த நாடு பேர­ழி­வைச் சந்­திக்க வேண்­டி­வ­ரும் என்று தெரி­வித்­தார் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப்.

ஈரா­னு­டனான ஒப்­பந்­தத்தை அமெ­ரிக்கா முறித்­துக் கொண்­டமை தொடர்­பில் அமெ­ரிக்­கத் தலை­ந­கர் வொஷிங்­ட­னில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே ட்ரம்ப் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

ஈரா­னு­ட­னான ஒப்­பந்­தத்தை அமெ­ரிக்கா முறித்­துக் கொண்­டுள்­ளதே தவிர அந்த நாட்­டின் மீது எந்­தப் பொரு­ளா­தா­ரத் தடை­யை­யும் விதிக்­க­வில்லை. அடுத்த மூன்று மாதங்­கள் வரை­யில் ஈரா­னின் நகர்­வு­கள் நுணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப்­ப­டும். ஈரான் ஏவு­க­ணைச் சோத­னை­கள் எதை­யும் செய்­யக்­கூ­டாது. அவ்­வாறு ஏவு­க­ணைச் சோத­னை­க­ளில் அந்­த­நாடு ஈடு­பட்­டால் பேர­ழி­வைச் சந்­திக்க வேண்­டி­வ­ரும் என்று ட்ரம்ப் மேலும் தெரி­வித்­தார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி