மாந­க­ர­ச­பை­யின் நிதி­க்கு­ழு தெரிவு!!

யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­ச­பை­யின் நிலை­யி­யல் குழுக்­க­ளில் ஒன்­றான நிதிக்­கு­ழு­வின் உறுப்­பி­னர்­களை நிய­மிப்­ப­தில் ஆரம்­பத்­தில் குழப்­ப­நிலை ஏற்­பட்டு இறு­தி­யில் சுமுக­மா­கத் தீர்க்­கப்­பட்­டது.

மாந­கர சபை­யின் நேற்­றைய கூட்­டத்­தொ­ட­ரின் போது மாந­கர முதல்­வர் நிலை­யி­யல் குழுக்­களை அமைப்­ப­தற்கு அதற்­கான உறுப்­பி­னர்­களை நிய­மித்து அந்த உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை வாசித்­தார்.

நிதிக் குழு­வுக்கு ஐந்து உறுப்­பி­னர்­கள் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து முதல்­வர் உள்­ளிட்ட மூன்று உறுப்­பி­னர்­க­ளும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­னி­யில் இருந்து இரண்டு உறுப்­பி­னர்­க­ளும், ஈழ­மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­யில் இருந்ரு ஒரு உறுப்­பி­ன­ரும் இவ்­வாறு தெரி­வா­கி­னர்.

இதற்கு சபை­யின் அங்கீ­கா­ரத்தை முதல்­வர் கோரி­னார். இதன்­போது குறுக்­கிட்ட சபை உறுப்­பி­னர் றெமி­டி­யஸ் தமது கட்சி சார்­பில் இரண்டு உறுப்­பி­னர்­களை நிதிக் குழு­வுக்­குச் சிபா­ரிசு செய்­தார்.

அத்­தோடு தமது கட்­சியே மாந­கர முதல்­வர் தெரி­வின் போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு அடுத்­த­தாக அதிக வாக்­கு­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் அந்­தக் கட்­சிக்கு ஒரு உறுப்­பி­ன­ரை­யும், மூன்­றா­வ­தா­கக் கூடிய வாக்­கு­க­ளைப் பெற்ற தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணிக்கு இரண்டு ஆச­னங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது தவ­றா­னது. எனவே இந்த நிதிக் குழு­வுக்­கான உறுப்­பி­னர்­களை நிய­மிப்­பதை சபை­யின் வாக்­கெ­டுப்­புக்கு விட வேண்­டும் எனக் குறிப்­பிட்­டார்.

இத­னை­ய­டுத்து சபை­யின் செய­லா­ளர் நிதிக்­கு­ழு­வுக்கு ஜந்து உறுப்­பி­னர்­கள் நிய­மிக்க வேண்­டும் என­வும், அதற்கு மேலாக உறுப்­பி­னர்­கள் தெரிவு செய்­யப்­பட்­டால் அது சபை­யின் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட வேண்­டும் எனத் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

இதன்­படி அதற்­கான வாக்கு சீட்­டுக்­க­ளைத் தயா­ரிக்­கும் கால நேரத்­தில் தேநீர் இடை­வேளை விடப்­பட்­டது. தேநீர் இடை­வே­ளை­யின் பின் மீண்­டும் சபை ஆரம்­ப­மா­னது. இதன்­போது கட்­சி­க­ளுக்கு இணக்­கப்­பாடு வாக்­கெ­டுப்­பைத் தவிர்க்­கத் தீர்­மா­னித்­துள்­ளோம் என்று மாந­கர முதல்­வர் சபை­யில் அறி­வித்­தார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி