நாடு தழுவிய ரீதியில் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு!!

நாடு தழுவிய ரீதியில் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருடன் செய்து கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் எட்கா உடன்படிக்கை ஆகியவற்றுக்கு எதிர்ப்பை வெளியிட்டு நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மெய்யான தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் வரையில் இவ்வாறான எதேச்சாதிகாரமான நடவடிக்கைகளிலிருந்து விலகியிருப்பதாக அரசாங்கம் உறுதி மொழி வழங்காவிட்டால், பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு தீர்வாக கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி தொடர்பில் புதிய சட்டமூலமொன்று கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார் எனவும், இதனால் புதிதாக சட்ட மூலம் கொண்டு வரும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறும் ஹரித அலுத்கே சங்கத்தின் சார்பில் கோரியுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி