சிறைக் கைதிகளை நேரில் சென்று வரவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்!!!

வடகொரிய சிறையில் இருந்து மூன்று அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் நேரில் சந்தித்து பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மூவரை வடகொரிய அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்ப்பியோ திடீர் பயணமாக நேற்று வடகொரியாவிற்கு சென்றார்.

தலைநகர் பியாங்யாங் சென்ற அவர், கிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பிற்கான இடம் மற்றும் திகதியை உறுதி செய்தார். மேலும், வடகொரியா கைது செய்துள்ள மூன்று அமெரிக்கர்களையும் விடுவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பின்னர், மைக் பாம்ப்பியோ அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு விடுதலை செய்யப்பட்டவர்களுடன் வந்தார்.

இந்த தகவலை அறிந்த டிரம்ப், வாஷிங்டன் நகரில் உள்ள ஆண்டுரூஸ் விமானப்படை தளத்துக்கு சென்று, மைக் பாம்ப்பியோவை வரவேற்றார்.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்டவர்கள் கூறுகையில் ‘எங்களை தாயகம் அழைத்து வர உதவிபுரிந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்ப்பியோ மற்றும் அமெரிக்க மக்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் அமெரிக்க ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி