சட்ட வரைவு அரசமைப்புக்கு முரணான தேசிய கணக்காய்வு!!

தேசிய கணக்காய்வு சட்ட வரைவு அரசமைப்புக்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இன்றைய அமர்வின் ஆரம்பத்தின் போது உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த சட்ட வரைவு தொடர்பில் நாளை மறுதினம் விவாதம் நடத்தபடவிருந்த நிலையில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது விவாதத்தை நடத்தாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு சட்ட ரைவு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதை அடுத்த உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனு ஒன்றை ஆராயந்த மன்று இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி