ஊழியர் சேமலாப நிதியை முறைகேடாகப் பயன்படுத்த திட்டமிடும் அரசாங்கம்!!

பங்குச் சந்தையை மீளக்கட்டியெழுப்பும் ​நோக்கில் ஊழியர் சேமலாப நிதியை முறைகேடாகப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக வசந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக தற்போதைக்கு பங்குச் சந்தையும் கணிசமான சரிவை எதிர்கொண்டுள்ளது

இந்நிலையில் பங்குச் சந்தையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஊழியர் சேமலாப நிதியின் பணத்தை அதில் முதலீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக விரைவில் வௌ்ளை அறிக்கையொன்றைக் கொண்டுவரவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது

அத்துடன் இந்த அரசாங்கம் கடந்த 2016ம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதியை பிணையாக வைத்து 300 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடனைப் பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இதில் தற்போதைக்கு 125 மில்லியன் டொலர்கள் கடன் பெறப்பட்டுள்ளது என்றும் வசந்த சமரசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி