மகிந்தவின் மரணம் குறித்து குறி கேட்ட பிரபல அரசியல்வாதி!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்திற்கு அமைய அவர் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார், அவருக்கு மரணம் ஏற்படக் கூடிய கிரக தோஷம் இருக்கின்றதா என பிரபல அரசியல்வாதி ஒருவர் தேடி பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அரசியல்வாதி இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள பிரபலமான பெண் சோதிடரிடம் இது பற்றி விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலளித்த அந்த பெண் சோதிடர், இந்த கேள்விக்கு இன்னும் 16 ஆண்டுகளுக்கு பின்னரே பதிலளிக்க முடியும் எனவும், முன்னாள் ஜனாதிபதிக்கு இடை நடுவில் எந்த ஆபத்தும் ஏற்படக்கூடிய கிரக தோஷங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சோதிடரிடம் மகிந்தவின் ஜாதகம் பற்றி விசாரித்த அரசியல்வாதியின் ஜாதகத்தை ஆராய்ந்த சோதிடர், குறுகிய காலத்தில் ஊசி மருந்தை போட்டுக் கொள்ளும் அளவில் நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் கூடிய சீக்கிரம் தேவையான பரிகாரங்களை செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பிரபல அரசியல்வாதி ஏனைய வேலைகளை ஒதுக்கி விட்டு தனக்கு ஏற்பட போகும் நோயை தடுக்க பரிகாரங்களை செய்ய ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி