யுத்த வீரர்கள் வேட்டையாடப்படுவதாக கூறுவது அரசியல் சூழ்ச்சித் திட்டம்!!

யுத்த வீரர்கள் வேட்டையாடப்படுவதாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஓர் வகையிலான அரசியல் சூழ்ச்சித் திட்டமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருணாகல் படைவீரர் நினைவுத்தூபியை நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் தேவைகளுக்காக உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படையினரின் குடும்ப உறுப்பினர்களைப் பயன்படுத்திக் கொள்வது தார்மீக ரீதியானதல்ல.

இந்த அரசாங்கம் படைவீரர்கள் வேட்டையாடப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலேயே படைவீரர்கள் உண்மையில் வேட்டையாடப்பட்டனர்.

அரசாங்கத்தை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் நோக்கில் படைவீரர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி