எரிபொருள் விலை உயர்வின் விளைவால் விநியோக நிலையங்களில் வாகன நெரிசல்!!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் விநியோக நிலையங்களில் வாகனங்கள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.

கொழும்பின் ஹெவ்லொக் வீதி எரிபொருள் நிலையமொன்றில் சுமார் அரைக் கிலோமீற்றர் தூரம் வரை வாகனங்கள் வரிசையில் காத்துக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக பொலிஸ் மைதானம் தொடக்கம் ஹெவ்லொக் டவுண் வரையான பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசலும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் 20 ரூபாவினாலும், டீசல் 09 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 40 ரூபாவினாலும் லீட்டர் ஒன்றுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் விநியோக நிலையங்களில் வாகனங்கள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.

கொழும்பின் ஹெவ்லொக் வீதி எரிபொருள் நிலையமொன்றில் சுமார் அரைக் கிலோமீற்றர் தூரம் வரை வாகனங்கள் வரிசையில் காத்துக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக பொலிஸ் மைதானம் தொடக்கம் ஹெவ்லொக் டவுண் வரையான பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசலும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் 20 ரூபாவினாலும், டீசல் 09 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 40 ரூபாவினாலும் லீட்டர் ஒன்றுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி