யாழ் மாணவனின் பரிதாபமான மரணம்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

காங்கேசன்துறையில் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது. சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவன் தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு அங்கிருந்து மதியவேளை, உறவினர்களைப் பார்ப்பதற்காக சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் உள்ள காங்கேசன்துறைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

மிகவும் சோர்வடைந்திருந்த அவர், அங்கு தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மென்பானமும் அருந்தியுள்ளார். இதன்பின் தலைசுற்றுவதாகக் கூறி வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவரை உறவினர்கள் உடனடியாக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி