மக்களை பழி வாங்கும் அரசாங்கம் - மஹிந்த ராஜபக்ச

அரசாங்கம் மக்களை பழி வாங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நாள் முதல் ராஜபக்சக்களிடமிருந்தும், கூட்டு எதிர்க்கட்சியிடமிருந்தும் பழிவாங்கல்களையே மேற்கொண்டு வந்தது.

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகளை உயர்த்தி இந்த அரசாங்கம் மக்களை பழிவாங்கியுள்ளது.

பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றின் விலையேற்றமானது அனைத்து மக்களையும் பாதிக்கும்.

இந்த விலையேற்றமானது வாகனங்களை மட்டும் பாதிக்காது பொருட்கள் சேவைகள் துறையிலும் தாக்கத்தை உண்டு பண்ணும்.

பொருட்களினதும் சேவைகளினதும் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே கடுமையான நெருக்கடி நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் இந்த விலையேற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாது திண்டாடுவார்கள் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி