சுதந்திரக்கட்சியின் தற்போதைய மாகாணசபை உறுப்பினர்கள் மஹிந்த அணியுடன் இணைந்து அடுத்த தேர்தலை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
பத்தரமுல்லை, நெளும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுண கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் முடிவில் சுதந்திரக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் மாகாணசபை தேர்தலின் போது பொதுஜன பெரமுணவின் தாமரை மொட்டு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற பிரேரணையை மேல் மாகாண சபை உறுப்பினர் சஹன் பிரதீப் முன்வைத்திருந்தார்.
இந்த பிரேரணைக்கு ஆதரவாக கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்த அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் கை உயர்த்தி ஆதரவளித்திருந்தனர்.
தற்போதைய நிலையில் சுதந்திரக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களில் 85 வீதமானவர்கள் மஹிந்த அணியுடன் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.