வடமராட்சி மீனவர்களின் கோரிக்கை!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் வெளி மாவட்ட மீனவர்கள் அத்துமீறி கடல் அட்டை பிடிப்பதால் தாம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாழையடி பகுதியில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் ஈடுபட்டனர்.

கடல் அட்டைகளை பிடிக்கும் வெளி மாவட்ட மீனவர்களை தொழிலை கைவிடுமாறு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், நாளை காலை பத்து மணி வரை அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ் மாவட்ட கரையோரத்திலிருந்து ஐந்து கிலோமீற்றருக்கு அப்பால் கடலட்டை பிடிப்பதற்கு கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தினால் 400 பேருக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி