மாணவர்களது செயல் வருத்தமளிக்கிறது!!


யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் செயற்படுவது குறித்து மன வருத்தமளிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பின்னணியில் பணம் உள்ளது என வடக்கு முதல்வர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மே - 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கடந்த 3 ஆண்டுகள் நடத்தப்படமை போன்று வடக்கு மாகாண சபை நடத்த திட்டமிட்டது.

எனினும், அதனை தலைமை ஏற்று நடத்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விருப்பம் தெரிவித்தது.

அதற்கான ஒழுங்குகளையும் செய்தது. எனினும் வடக்கு மாகாணசபையே நிகழ்வை முன்னெடுக்கும் எனவும், பல்கலைக்கழக மாணவர்களை தம்மோடு இணையுமாறும் முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அதனை நிராகரித்தது.

இந்த நிலையிலேயே மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு தமக்கு வருத்தமளிப்பதாகவும், அவர்கள் யாரோ ஒரு தரப்பின் பின்னணியில் செயற்படுவதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி