24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் நடத்தப்பட்டுள்ள விசாரணை!!

24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேராவின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடமும் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், தமது பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் விசாரணை நடத்தப்படவில்லை என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி