31 பௌத்த பிக்குகளின் 31ஆவது வருட நினைவு தினம் இன்று!!

அம்பாறை மாவட்டத்தின், அரன்தலாவ பகுதியில் கடந்த 1987ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 31 பௌத்த பிக்குகளின் 31ஆவது வருட நினைவு தினம் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அரன்தலாவ விகாராதிபதி சாஸ்ரபத்தி கிரிதிவெல ஹோமரத்ன தலைமையில் இதற்கான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

அம்பாறை ஸ்ரீ வித்தியானந்த மகா பிரிவெனயில் கல்வி கற்று வந்த பௌத்த பிக்குகள் 31 பேர் கடந்த 1987ஆம் ஆண்டு ஜூன் 02ஆம் திகதி அம்பாறை மஹாஓய வீதியின், அரன்தலாவ பகுதியில் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டனர்.

பௌத்த பிக்குகள் 31 பேர் கொலை செய்யப்பட்டமையை நினைவுகூரும் வகையில் 300 பௌத்த மதகுருமார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, அவரது பாரியார் தீப்தி போகொல்லாகம, நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித வணிக சூரிய ஆகியோருடன் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர மற்றும் முப்படையினரின் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி