பவனைக்கு உதவாத நிலையில் காணப்படும் 50 கோடி ரூபா பெறுமதியான பால் மா!!

50 கோடி ரூபா பெறுமதியான பால் மா பயன்படுத்தப்பட முடியாத நிலைமை குறித்து ஜனாதிபதி விசாரணைக்குழு இன்றைய தினம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான 50 கோடி ரூபா பெறுமதியான பால் மாவே இவ்வாறு பவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடித்துறை நீரியல் வள அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் போது 40000 பக்கட் பால் மாவும், 25 லட்சம் கிலோ கிராம் எடையுடைய பக்கட்டில் அடைக்கப்படாத பால் மாவும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவை அனைத்துமே பாவனைக்கு உகந்தவை அல்ல என தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி