நுண்கடன் நிதியால் வடக்கில் 59 தற்கொலை சம்பவங்கள்!!

நுண்கடன் நிதியினால் வடக்கில் 59 தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் அமையம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது மேலும்,

போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறிய பின்னர் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் கடன் பெற்று அதனை மீள செலுத்துவதில் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கடனை திருப்பி செலுத்துவதில் சிரமத்தினை எதிர்கொள்பவர்களில் ஒரு சிலர் தற்கொலை எனும் வழியை தேடிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் வடக்கில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் 59 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் இது வரையில் 17 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி