வடகொரியா அதிபர் மண்டியிட்டு கெஞ்சியதால் சந்திக்க ஒப்புக்கொண்ட ட்ரம்ப்!

அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியாவின் மீது கடும் கோபத்தில் இருந்த அமெரிக்கா, பல்வேறு தடைகளை விதித்தது.

இதன் பின்னர் திடீரென மனம் மாறிய வடகொரியா அதிபர் கிம் தனது அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாக அறிவித்தார். மேலும் சீனாவிற்கு பயணம் செய்தார். அதுமட்டுமின்றி அண்டை நாடான தென் கொரியாவுடன் சமாதான பேச்சு வார்த்தையும் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து வடகொரியா அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்திக்க போவதாக செய்திகள் வெளியாகின.

அதற்கான தேதி மற்றும் இடம் முடிவான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.அதன்பின் மீண்டும் சந்திப்பு உறுதி செய்யப்பட்டு12 ஜூன் அன்று சிங்கப்பூர் ரிஸார்ட் தீவு செண்டோசாவில் ஆடம்பரமான ஹோட்டலில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி பியோங்கியாங்கிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்து ட்ரம்ப் -கிம் உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் வழக்கறிஞரும் முன்னாள் நியூயார்க் மேயருமான ரூடி கிலியாணி தற்போது சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்,வடகொரியா அதிபர் கிம் மண்டியிட்டு கெஞ்சி கேட்டதாலேயே இந்த சந்திப்பு நிகழவிருப்பதாக ரூடி கூறியிருக்கிறார்.

”எங்களோடு அணு ஆயுதப் போர் புரியப் போவதாகவும் அதில் எங்களைத் தோற்கடிக்கப் போவதாகவும் வடகொரியா சவால் விட்டு வந்தது ஆகவே இந்த சூழ்நிலையில் இந்த சந்திப்பை நிகழ்த்த வேண்டாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் கிம் தனது முழங்கால்களால் மண்டியிட்டுக் கேட்டுக் கொண்டதாலேயே இந்த சந்திப்பு நிகழவிருப்பதாக” முதலீட்டு மாநாடு ஒன்றில் பேசும்போது ரூடி கிலியாணி தெரிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் இவர்கள் இருவரின் சந்திப்பு நிகழவிருக்கும் வேளையில் இவ்வாறான தகவல் தற்போது சர்சைக்குரியதாகி இருக்கிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி