நாடாளுமன்றத்திற்கு புதிய பிரதி சபாநாயகர் தெரிவு!!

நாடாளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு பல கட்சிகளில் இருந்தும் பலரது பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில், ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவாகியுள்ளார்.

இதில் ஆனந்த குமாரசிறிக்கு ஆதரவாக 97 வாக்குகளும், சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேக்கு ஆதரவாக 53 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்திலிருந்தும், பிரதி சபாநாயகர் பதவியிலிருந்தும் திலங்க சுமத்திபால விலகியிருந்தார்.

பிரதி சபாநாயகராக பதவி வகித்த திலங்க சுமத்திபாலவின் இராஜினாமா இன்று நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி