ஹவாய் தீவில் சில மணி நேரங்களுக்குள் காணாமல் போயுள்ள நன்னீர் ஏரி!!

ஹவாய் தீவிலுள்ள நன்னீர் ஏரி ஒன்றை சில மணி நேரங்களுக்குள் Kilauea எரிமலையிலிருந்து வெளியாகும் எரிமலைக் குழம்பு கபளீகரம் செய்தது.

ஏராளமான வீடுகள் உட்பட பல கட்டிடங்களை விழுங்கியும் திருப்தியடையாத எரிமலைக் குழம்பு தண்ணீரையும் உறிஞ்சி வருகிறது.

Kapoho வளைகுடாவை நிரப்பி கடற்கரையின் வடிவத்தையே மாற்றி வரும் எரிமலைக் குழம்பு நன்னீர் ஏரியான கிரீன் ஏரியையும் விட்டு வைக்கவில்லை. முன்னதாக திங்கட்கிழமை 5.5 ரிக்டர் அளவிலும், செவ்வாய்க்கிழமை 5.6 ரிக்டர் அளவிலும் ஹவாயின் Volcanoes National Park அமைந்துள்ள பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்பட்டன.சுனாமி ஏற்படும் அச்சம் எதுவும் இல்லாவிட்டாலும் அப்பகுதியில் உள்ள கட்டிடங்களும் சாலைகளும் சேதமடைந்தன.

இந்நிலையில் வளைகுடாவை நோக்கி வரும் எரிமலைக் குழம்பு தீவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான கிரீன் ஏரியை அடைந்து சில மணி நேரத்தில் அதை நிரப்பியது.ஐந்து மணி நேரத்தில் ஏரி நீர் முழுவதும் எரிமலைக் குழம்பின் வெப்பத்தினால் ஆவியாகி விட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 10 மணிக்கு கிரீன் ஏரியை அடைந்த எரிமலைக் குழம்பு மாலை 3 மணியளவில் ஏரியை நிரப்பியது.

ஹெலிகொப்டரில் பறந்து சென்று பார்வையிட்ட தீயணைப்புத் துறையினர் எரிமலைக் குழம்பு ஏரியை நிரப்பி விட்டதாகவும் அங்கு ஏரியே இல்லை என்றும் நிலவியல் துறைக்கு அறிக்கை அளித்துள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி