கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சையில் கட்டாயமாக்கப்படவுள்ள சுகாதார பாடம்!!

கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சுகாதாரத்தை கட்டாயப்பாடமாக்குவதற்கு சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சுகாதார நோய்கள் வயது வேறுபாடின்றி பலரையும் பீடித்து கொண்டிருக்கின்றன.

சுகாதாரம் தொடர்பான சரியான அறிவின்மையே இதற்கான மிக முக்கிய காரணமாகும். இதனால் சுகாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவுறுத்துவது அத்தியவசிய ஒன்றாக மாறியுள்ளது.

எனினும், தற்கால பாடசாலை கல்வித்திட்டத்தில் ஆறாம் வகுப்பு தொடக்கம் ஒன்பதாம் வகுப்பு வரையே சுகாதார பாடம் கட்டாய பாடமாக கற்பிக்கப்படுவதுடன், கல்விப்பொது சாதாரண தர பரீட்சையில் இது கட்டாய பாடமல்ல.

அதனடிப்படையில், குறித்த பாடத்தினை கல்விப்பொது சாதாரண தர பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்ற வேண்டும் என்று சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பாடத்திட்ட சீர்திருத்தத்தின் போது ராஜிதவின் யோசனைகளை இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கல்வி மறுசீரமைப்புக்கான அறிஞர் குழுவினால் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், இவற்றை கவனத்திற் கொண்டு, பாடசாலை பாடப்பரப்பு திருத்தங்கள் தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தினை கொண்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபார்களையும் பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த யோசனையினை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி