இன்று அலரிமாளிகையில் கிராம சேவை அதிகாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு!

கிராம சேவை அதிகாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இன்றைய நிகழ்வில் 1650 பேர் கிராம சேவை அதிகாரிகளுக்கான நியமனம் வழங்கி வைக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

கிராம சேவை அதிகாரிகள் நியமனத்துக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதன் காரணமாக 50 இற்கு 50 என்ற அடிப்படையில் ஆண், பெண் நியமனங்களை வழங்குவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன சமர்ப்பித்திருந்த குறித்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக தகுதி அடிப்படையிலேயே இன்றைய நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக இன்றைய தினம் கூடுதலான பெண்கள் நியமனம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி