சமூகத்தை முன்னேற்ற இராதாகிருஷ்ணன் கூறுவது!!!

சமூகம் ஒன்று முன்னேற்றமடைய வேண்டுமானால் இருப்பிடம், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய நான்கு விடயங்களும் சரியாக அமைய வேண்டும். இதில் 200 வருடங்கள் வாழ்ந்த மலையக சமூகம் தனி வீடுகள் உரிமைகளை பெற்று உயர்வாக வாழ்வதற்கு இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இப்போது பாரிய உதவிகளை செய்து வருகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் ஊடான 14000 வீட்டு திட்டத்தில் 250 வீடுகளை தலவாக்கலை மடக்கும்புரை மேல் பிரிவு தோட்டத்தில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா வைபவ ரீதியாக இன்று இடம்பெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

மடக்கும்புர தோட்ட மக்களுக்கு இன்றைய நாள் ஒரு முக்கிய நாளாகும். இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் 250 வீடுகளை இலவசமாக கட்டியமைத்து கொள்ள இங்குள்ள மக்கள் வரப்பிரசாதம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் வீடுகள் அமைக்கும் திட்டங்கள் பல உண்டு. கடன் தொகையில் வீடுகளும், இலவசமான வீடுகளும் அத்திட்டங்களில் அமைகின்றது. ஆனால் இந்திய அரசாங்கம் நமது மக்களுக்கான வீடுகளை இலவசமாகவே கட்டியமைத்து தருகின்றது.

அந்தவகையில் நமது மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என தெரிவித்தார். இந்திய வம்சாவளி மக்களின் வரலாற்றில் தனி வீடுகள் கிடைப்பதற்கு நாட்டின் பிரதமர்

மற்றும் ஜனாதிபதியூடாக அமைச்சர் பதவியை ஏற்ற திகாம்பரம் அவரின் உண்ணத சேவையாக இதை செய்து வருகின்றார்.

நமது மக்களின் 200 வருட வரலாற்றில் தனி வீடு, கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய விடயங்களில் படிப்படியாக முன்னேறி வருவதற்கு இலங்கை அரசாங்கம் எமக்கு அளிக்கும் உதவிக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கிடையில் உள்ள நல்லுறவு காரணமாகவே இந்திய நாட்டின் பிரதமர் மோடி இலங்கைக்கு வருகை தந்து நமது மக்களுக்காக 10000 வீடுகளை தந்து உதவினார்.

இந்தியாவை புறம் தள்ளிவிட்டு இலங்கை எந்தவொரு செயலையும் செய்ய முடியாது. அதேபோன்று இந்தியாவும் செயல்பட முடியாது என தெரிவித்த இவர் எதிர்வரும் காலத்தில் இந்திய மற்றும் இலங்கை அரசுகளில் உதவிகளை பெற்று நமது சமூகத்தை முன்னேற்றமடைய செய்ய வேண்டும் என்றார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி