வடகொரிய தலைவரின் புகைப்படத்தின் முக பாவனையை போட்டோ ஷாப் செய்துள்ள ரஷ்ய தொலைக்காட்சி!!

ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரை வடகொரிய தலைவர் கிம் சந்தித்த நிலையில் அவர் முக பாவனையை ரஷ்ய தொலைக்காட்சி போட்டோ ஷாப் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய தலைநகர் Pyongyang-ல் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லவ்ரவும், கிம் ஜாங்கும் கை குலுக்கி கொண்டனர்.

இந்த சமயத்தில் கிம் ஜாங் தனது முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார்.

இது சம்மந்தமான புகைப்படங்கள் பல ஊடகங்களில் வந்தன. ஆனால் ரஷ்யா 1 என்ற ரஷ்யாவின் தொலைக்காட்சி ஊடகத்தில் மட்டும் குறித்த புகைப்படத்தில் கிம் ஜாங் சிரிப்பது போன்று காட்டப்பட்டது.பின்னர் தான் அது போட்டோ ஷாப் செய்யப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த புகைப்படங்கள் சமுகவலைதளங்களில் பகிரப்பட்டு வருவதோடு விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

இந்த செயலில் ஈடுபட்ட ரஷ்யா 1 நிறுவனம் இது குறித்து இன்னும் விளக்கமளிக்கவில்லை.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை todayyarl[email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி