பிளாஸ்ரிக் வெற்று போத்தல்களை விலைக்கு வாங்கி மீள்சுழற்சிக்கு உட்படுத்த நடவடிக்கை!

கழிவாக வீசப்படும் பிளாஸ்ரிக் வெற்று போத்தல்களை விலைக்கு வாங்கி அவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதோடு திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்து சூழலை பாதுகாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாநகர சபை நிலையியற் குழுக்களின் சுகாதாரப் பிரிவுத் தலைவர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் இது தொடர்பான வேலைத் திட்டம் இன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளில் பிளாஸ்ரிக் போத்தல்களை தரம்பிரித்து மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் செயற்திட்டத்திற்கு நிதி அனுசரணை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஆசிய பவுண்டேஷன், பெய்ரா குறூப் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை என்பனவற்றினால் கைச்சாத்திடப்படவுள்ளது..


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி