இந்து சமயம் அழிவடையும் காலம் விரைவில்!!

இந்து கலாசார அமைச்சின் பிரதியமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார் எனும் போது இதைவிட்ட கிரந்தம் வேறு எதுவும் இல்லை எனலாம்.

இந்து சமயத்துக்கான பிரதியமைச்சராக மஸ்தானை நியமிக்கின்றவர்கள் தங்கள் பெளத்த மதத்துக்கு மஸ்தானைப் பிரதியமைச்சராக நியமிப்பார்களா?

அல்லது கத்தோலிக்க மதத்துக்கு ஒரு இஸ்லாமியரை பிரதியமைச்சராக நியமிக்க முடியுமா?

சரி, இதைத்தான் செய்ய முடியாது என்றால், இஸ்லாமிய சமயத்துக்குப் பொறுப்பான பிரதியமைச்சராக இஸ்லாமியர் தவிர்ந்த வேறு எந்தச் சமயம் சார்ந்தவரையேனும் நியமிக்க முடியுமா?

ஆக, எல்லோரும் ஏறி இருந்து சவாரி செய்யக் கூடிய மதமாக இந்து சமயம் இருப்பதால், இஸ்லாமியர் ஒருவரை இந்து கலாசார பிரதியமைச்சராக இலங்கை அரசு நியமித்துள்ளது.

சிவபூமி என்று திருமூலரால் போற்றப்பட்ட இலங்கைத் தீவு சிவபக்தனாகிய இராவணனால் ஆளப்பட்டது.ஆனால் இன்று இந்து மதத்தை அழித்து ஒழிப்பதற்கு ஏகப்பட்ட சதித் திட்டங்கள் நடக்கின்றன.

மத மாற்றம் என்ற பெயரில் கூலிப்படைகள் இந்து சமயத்தவர்களைத் தத்தம் சமயத்துக்கு இழுக்கின்றனர்.இதுதவிர, இந்து ஆலயங்களுக்கு அருகில் தத்தம் வழிபாட்டு நிலையங்களை அமைப்பதிலும் பிற சமயங்கள் அதீத தீவிரம் காட்டுகின்றன.

நிலைமை இதுவாக இருக்கையில், இந்து சமய அமைப்புக்கள் ஏனோதானோ என்ற நிலைப்பாட்டில் இருப்பதையும் இங்கு கூறித் தானாக வேண்டும்.

மாட்டிறைச்சிக் கடைகளை ஆதரித்து அதற்காகக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் நம் இந்து சமயத்தில் இருக்கும் போது இந்து சம யம் உய்வு பெறுவதென்பது முடியாத காரியமே.

எது எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தில் இந்து சமயத்தவர்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்படுகின்றனர்.

தென்பகுதியில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் ஒவ்வொரு நாளும் மதம் மாறுதல் பற்றிய விளம்பரம் வந்தவண்ணமுள்ளது.

இதுபற்றி சரியான ஆய்வு செய்யப்பட்டால், கிழக்கு மாகாணத்தில் இந்து சமயத்தவர்களை முஸ்லிம் மக்கள் ஏதோவொரு வகையில் மதமாற்றம் செய்கின்றனர் என்பது தெரிய வரும்.

இவ்வாறு இடம்பெறும் மதமாற்றத்தை மேலும் துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவர் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கலாம் என அனுமானிப்பதில் தவறில்லை.

என்ன செய்வது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இந்து சமயத்துக்கு அறவே இட மில்லை எனும் போது இந்து சமயத்துக்கான பிரதியமைச்சராக மஸ்தான் இருந்தால் என்ன? மரிக்கார் இருந்தால் என்ன? என்பதே நிலைமை.

எதுவாயினும் இந்து கலாசார பிரதியமைச்சுப் பதவி எனக்கு வேண்டாம் என்று மஸ்தான் கூறியிருந்தால் அது அவருக்கு பெருமையைக் கொடுத்திருக்கும் என்பதை மட்டுமே இப்போதைக்கு கூற முடியும்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி