ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி சென்னையில் பன்னாட்டு வழக்கறிஞர்களின் மாநாடு!!

ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்களின் மாநாடு ஒன்று சென்னையில் இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாடு, சர்.பிட்டி தியாகராஜா அரங்கம், ஜி.என்.செட்டிசாலை, தியாகராய நகர், சென்னை - 17.ல் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் தலைமை தாங்குகின்றார்.

மேலும், இந்த மாநாட்டில் சென்றை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான K.P.சிவசுப்பிரமணியம், G.M.அக்பர்அலி A.K. ராஜன் ஆகியார் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றவுள்ளனர்.

சிறப்பு அழைப்பாளராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வழக்கறிஞர் K.சுகாஷ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி