ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த குற்றச்செயல்கள் குறித்து தீவிர நடவடிக்கை!!!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் சென்று தாக்கப்பட்டமை, றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை உட்பட சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்வதென, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அண்மையில் நடந்த சந்திப்பின போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தேசிய அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை களைந்து, அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கலந்துரையாட இரண்டு கட்சிகளின் பிரதானிகள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திக்கொண்ட போதே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இந்த தீர்மானம் சம்பந்தமான ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபரை அழைத்து தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த மேற்படி கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் குறித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி