சிரியா நாட்டின் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள வடகொரியா ஜனாதிபதி!!

சிரியா நாட்டின் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத், தங்கள் நாட்டிற்கு வருகை தர உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இருவரும், வருகிற 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்று பேச உள்ளனர்.

இந்நிலையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு ஜனாதிபதி கிம்மை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வடகொரிய அரசு ஊடங்கங்கள் உறுதி செய்துள்ளன.

இதுதொடர்பாக, சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் கூறுகையில், ‘நான் வடகொரியாவுக்கு செல்ல இருக்கிறேன். அந்நாட்டு ஜனாதிபதி கிம் உடன் எனது சந்திப்பு நடைபெறுகிறது.

சமீபத்தில் கொரிய தீபகற்பத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், உலகின் சிறந்த அரசியல் திறமைமிக்க கிம் ஜாங் உன்னால் நடத்தப்பட்டன’ என தெரிவித்துள்ளார்.

கிம்-ஆசாத் இடையேயான இந்த சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

சிரிய உள்நாட்டுப் போரில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதற்கு வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன், சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு உதவியதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி