சீனாவின் அபிவிருத்தித் திட்டங்களால் இலங்கைக்கு எதிரான தாக்கங்களே ஏற்படுகின்றன!

மத்தல மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்கள் எதுவும் வருவதில்லை என நேற்று ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து விலகிய சுரேன் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 5 ஆம் திகதி நடந்த விமான நிறுவனங்களின் பிரதான நிறைவேற்று அதிகாரிகளின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பதவி விலகுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் இந்த மாநாட்டில் இதனை கூறியுள்ளார். மத்தல சர்வதேச விமான நிலையத்தை “வெள்ளை யானை” என அடையாளப்படுத்த முடியும்.

பெரும்பாலும் மத்தளை விமான நிலையம் இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையின் நிர்வாகத்திற்கு வழங்கப்படக் கூடும். எனினும் அது பற்றி தனக்கு சரியான விபரங்கள் தெரியாது எனவும் சுரேன் ரத்வத்தே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சீனாவின் உதவியின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் யாருக்காக ஆரம்பிக்கப்பட்டன என்பது தனக்கு தெரியாது.

எனினும் அவற்றின் மூலம் இறுதியில் இலங்கைக்கு நேர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டதாகவும் சுரேன் ரத்வத்தே மேலும் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி