பிரதமரின் சகோதரரது ரீ.என்.எல் தனியார் தொலைக்காட்சிக்கு சீல்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரரான ஷான் விக்ரமசிங்கவின் தொலைக்காட்சி சேவையான ரீ.என்.எல் தனியார் தொலைக்காட்சி சேவையின் ஒளிபரப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ரீ.என்.எல் தொலைக்காட்சியின் பொல்கஹாவெல ஒளிபரப்பு நிலையமே இவ்வாறு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இவ்வாறு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்ட நிலையில் தமத தொலைக்காட்சி சேவை சீல் வைத்து மூடப்பட்டதாக நிறுவனத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிபரப்பு நிலையத்தின் உபகரணங்களையும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எடுத்துச் செல்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டு மொத்த தொலைக்காட்சி சேவையும் முடக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் சகல ஒளிபரப்புக்களும் நிறுத்தப்பட்டுள்ள சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

அண்மைய நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ரீ.என்.எல் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி