அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருவதாக சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!!!

தென் சீன கடல் விவகாரத்தில், சீனா ஏவுகணைகளை நிலைநிறுத்தி அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மெட்டீஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், அமெரிக்க பாதுக்காப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மெட்டீஸ் கலந்துகொண்டார்.

அப்போது அவர், ஏவுகணைகளை நிலைநிறுத்தி அண்டை நாடுகளை சீனா அச்சுறுத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘தென் சீன கடல் விவகாரத்தில் சீனா தனது அண்டை நாடுகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

பல்வேறு ஏவுகணைகளை சீனா, தென் சீன கடல் பகுதியில் நிறுவியுள்ளது. வடகொரியா முழுமையான அணு ஆயுத சோதனையை கைவிட வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் டிரம்ப்-கிம் சந்திக்கும்போது, தென்கொரிய மற்றும் அமெரிக்க ராணுவங்களின் பயிற்சி குறித்து விவாதிக்கப்படாது’ என தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி