வாகன விபத்துக்கள் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள விளம்பர தொலைக்காட்சி!!

வவுனியா பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக விளம்பர தொலைக்காட்சி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் ஒளிக் கதிர்வீச்சு ஏற்பட்டு வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனை கட்டுப்படுத்துவதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரியுள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் காட்சிப்படுத்தும் தொலைக்காட்சி அமைக்கப்பட்டு பகல் இரவில் விளம்பரம் ஒலிபரப்பாகி வருகின்றது.

இதனால் இரவில் மணிக்கூட்டுக்கோபுரம் பகுதியில் ஒரு பக்கம் மட்டும் ஒளிவீச்சு அதிகரித்து காணப்படுகின்றது.

அப்பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு அதிக ஒளி பரப்புவதாலும் விளம்பரத்தைப்பார்வையிட்டு வாகனம் செலுத்துவதால் வாகனங்கள் ஒளியைவிடவும்

தொலைக்காட்சியின் ஒளி அதிகம் பரப்புவதால் ஒன்றுக்கொன்று விபத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குறித்த பகுதியில் விளம்பரம் காட்சிப்படுத்தும் தொலைக்காட்சி அமைப்பதற்கு அனுமதி வழங்கும்போது இதனைக்கவனத்தில் கொண்டு வழங்கப்படவேண்டும்

இவ்வாறு விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளதால் அவ்வீதியூடாகச் செல்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதனை உடனயடியாக அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு ஒரு பகுதியில் அமைக்குமாறும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி