புதிய கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும் மகிந்த!!

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் 30 ஆண்டுகள் போர் நடைபெற்ற போர் நாடு அழிவுகளை சந்தித்தது. எனினும் போர் நடைபெற்ற காலத்தை விட தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நாடு அழிவடைந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர், ஐக்கிய தேசியக்கட்சிக்கு தேவையான வகையில் செயற்படுபவர் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சின்னாப்பின்னமாகி விடும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருந்தமை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அபேகுணவர்தன, பொதுஜன பெரமுன எந்த சந்தர்ப்பத்திலும் பிளவுபடாது எனக் கூறியுள்ளார்.

மக்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேசிப்பதாகவும் அவருடன் இருப்பதால் மக்கள் தம்மையும் நேசிக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி