கட்சி உறுப்பினர்களுக்கு இடையே முறுகல்!!

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்து தங்கி நின்று கடலட்டை பிடியில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேறுமாறு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கொழும்பில் இருப்பவர்கள் மத்திய அரசின் பேச்சுக்கு செயல்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவருடைய கருத்துக்கு கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவருடன் வாக்குவாதத்திலும் இடுபட்டுள்ளனர்.

இதனால் போராட்ட இடத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி