வட மாகாண ஆளுநர் பாதுகாப்பு பிரிவினருக்கு விடுத்த முக்கிய அறிவித்தல்!!

வட மாகாண பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.

சர்வமத தலைவர்களுடன் வடக்கு ஆளுநர் தலைமையில் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, வட மாகாணத்தின் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் மத்தியிலிலுள்ள போதைப்பொருட்களின் பாவனை, சட்டவிரோத செயற்பாடுகள் என்பவற்றை தடுப்பதற்கு அனைவரும் சிறந்த முறையில் செயற்பட வேண்டும்.

அத்துடன் இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விரைவாக செயற்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த கலந்துரையாடலில் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், படைத்தரப்பினர், கிராம சேவையாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி