கோலாகலமாக ஆரம்பமான வடகிழக்கு பிரிமியர் லீக்!

இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் புதிய திருப்புமுனையாக உள்ள வடகிழக்கு பிரிமியர் லீக் (North East Premier League) தொடர் கடந்த 30ஆம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் போட்டியில் ட்ரிங்கோ டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி கிளியூர் கிங்ஸ் அணி வெற்றியை தனதாக்கியது.

இரண்டாவது போட்டியில், மாதோட்டம் ஏப்.சி அணியை ரில்கோ கொன்கியூரஸ் அணி வெற்றிகொண்டது.

மூன்றாவது போட்டியில் நோர்த்தன் எலைட் எப்.சி அணியுடன், தமிழ் யுனைட்டட் எப்.சி அணிகள் மோதியுள்ளன.

அந்த வகையில் இன்று அம்பாறை அவென்ஜேர்ஸ் மற்றும் பட்டி சுப்பர் கிங்கஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கில் 8 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகள் மோதிக்கொள்ளும் விறுவிறுப்பான உதைபந்தாட்ட தொடரின், முதல் பரிசு 50 இலட்சம் ரூபாய், 2ஆம் பரிசு 30 இலட்சம், 3ஆம் பரிசு 15 இலட்சம் ரூபாயாகும்.

அத்துடன், நான்காம் இடத்தைப் பெறும் அணிக்கும் 5 இலட்சம் ரூபா பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

இந்த போட்டிகள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இரவில் விளையாடும் போட்டிகளாக நடைபெறுகின்றன.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி