மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்!!

பதவிக்காலங்கள் முடிவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்றும் கலைக்கப்படவுள்ள மாகாண சபைகள் அனைத்தினதும் தேர்தலை ஒரே தினத்தில் வைக்க முடியும் என எதிர் பார்க்கிறோம்.

இது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளிவரும். பதவிக் காலம் முடிவடைந்துள்ள மாகாண சபைகள் மற்றும் கலைக்கப்படவுள்ள மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்படும்.

இந்நிலையில் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது இது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், ஜனாதிபதியுடன் கலந்துரையாட தயார் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி