வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள்!

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என வெளியான புகைப்படங்கள் சந்தேகநபர்களுடையது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்று வாள்வெட்டை நடத்தியுள்ளனர்.

இந்த வாள்வெட்டை நடத்திய குழுவை, அப்பகுதி இளைஞர்கள் துரத்திச் சென்ற போது ஒருவரை மோட்டார் சைக்கிளுடன் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

எனினும் இந்த சம்பவம் நடைபெற்ற போது, வாள் வெட்டுடன் தொடர்புடையவர்கள் என நான்கு இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சீ.சீ.டி.வி கெமராவின் உதவியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் இருக்கும் 4 இளைஞர்களின் புகைப்படங்கள் வெளிவந்தன.

எனினும் குறித்த புகைப்படத்தில் இருப்பவர்கள் வாள்வெட்டுக்குழு இல்லை என்றும், அவர்கள் வாள் வெட்டுச் சம்பவத்தை பார்க்க வந்தவர்கள் என்றும் குறித்த இளைஞர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த இளைஞர்கள் அப்பகுதியில் வாள் வெட்டுச்சம்பவம் நடைபெற்றதை அறிந்து பார்க்கச் சென்றவர்கள் எனவும், சந்தேகநபர்களாக இவர்களது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கள் மற்றும், ஊடகங்களின் வாயிலாக வெளிவந்துள்ளதால் இளைஞர்களும், பெற்றோரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும் குறித்த புகைப்படங்கள் பொலிஸாரின் மூலமாகவே ஊடகவியலாளர்களுக்கு கிடைத்துள்ளது என ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த புகைப்படத்தில் காணப்படும் இளைஞர்களுக்கும், இந்த வாள்வெட்டுச் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected]com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி