ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சான்சஸ்!!

ஸ்பெயின் நாட்டின் பிரதமராக இருந்த மரியான ரஜாய் பதவி விலகியதைத் தொடர்ந்து, பெட்ரோ சான்சஸ் அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவியேற்றார்.

ஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, இவரது கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. அதன் பின்னர் நடந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், மரியானா ரஜாய் தோல்வியடைந்தார்.

இதனால் அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து, பெட்ரோ சான்செஸ் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தில் அவருக்கு ஆதரவாக 180 பேரும், எதிராக 169 பேரும் வாக்களித்ததால் நம்பிக்கை தீர்மான வெற்றி அடிப்படையில் பெட்ரோ சான்செஸ் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஸ்பெயின் மன்னர் ஃபெலிப் முன்னிலையில் வழக்கம் போல பைபிள் அல்லது க்ரூசிஃபிஸ் மீது ஆணையிடாமல், முதல் முறையாக அரசியலமைப்பு சட்டத்தின் மீது ஆணையிட்டு பெட்ரோ இன்று பிரதமராக பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து, பெட்ரோ சான்செஸ் வரும் 2020ஆம் ஆண்டு வரை ஸ்பெயின் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பார். பெட்ரோ அந்நாட்டின் 7வது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி